‘TEA’ விளம்பர விருதுகள் அறிமுகம்

tea awards_00018டிசன் விருது நிறுவனம் திரைத்துறையினருக்கு சினிமாவை கண்டுபிடித்த எடிசன் பெயரில் கடந்த 6 ஆண்டுகளாக விருதுகளை வழங்கி வருகிறது.

தற்போது இந்நிறுவனம் எலக்ட்ரானிக் மீடியா விளம்பரங்களுக்காக முதல் முறையாக ‘TEA விருதுகள்’ என்ற விருதைஅறிமுகப்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவில் விளம்பரங்களுக்கென விளம்பர விருதுகள் ஏதும் இல்லாத காரணத்தால் இந்த விருதுகளை அறிமுகப்படுத்துவதாக எடிசன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘Father of Advertisement’ , அதாவது உலகில் முதன் முதலில் விளம்பரம் செய்தவர் என்ற பெருமை தாமஸ் ஜே. பெராட் என்பவரையே சாரும. அதன் பிறகுதான் ஒரு பொருளை சந்தைப்படுத்த விளம்பரம் தேவை என்ற யுக்தி பயன்பாட்டிற்கு வந்தது.

எனவே, அவரது பெயரில் ‘Thomas Edison Advertisement’ என்பதைச் சுருக்கி ‘TEA AWARDS’  என்று பெயரிட்டுள்ளார்கள்.

இந்த விருதில் மொத்தம் 33 பிரிவுகளில் ‘ஆன் -லைன்’ மூலம் ஓட்டு போட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளிலும் முதன்மையான விளம்பரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதில் பிடித்தமானவற்றை தேர்ந்தெடுத்து வாக்களிக்கலாம்.

அதிக ஓட்டுக்களைப் பெறும் விளம்பரத்திற்கு விருதுகள் வழங்கப்படும்.

இந்த விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு, சென்னை, ஸ்ரீ முத்தா வெங்கடசுப்பாராவ் கான்சர்ட் ஹால், லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் நடைபெற உள்ளது.

இதில் திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். தென்னிந்தியாவைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள், பிரான்ட் அம்பாசடர்கள், விளம்பரத்தில் நடித்தவர்கள், விளம்பரம் செய்த நிறுவனங்கள்,  விருதுகளைப் பெற உள்ளனர்.

பிடித்த விளம்பரத்திற்கு வாக்களிக்க www.edisonawards.in என்ற வலைதளத்தில் வாக்களிக்கலாம்.

இந்த விருதுகளுக்கான ‘லோகோ’ அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

Read Previous

தமிழகத்தில் 50 தியேட்டர்களில் ‘போலீஸ் கிரி’

Read Next

நீதிமன்றத்தில் ஆஜராக நடிகை அஞ்சலிக்கு உத்தரவு

Most Popular