நீதிமன்றத்தில் ஆஜராக நடிகை அஞ்சலிக்கு உத்தரவு

anjali-with-her-motherஜுலை 9ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராகும்படி அஞ்சலிக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஞ்சலி சில மாதங்களுக்கு முன் திடீரென ஒரு சில நாட்கள் காணாமல் போன போது, அவருடைய சித்தி பாரதிதேவி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணக்கு வந்த போது, இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதாடினர். அஞ்சலியின் வழக்கறிஞர் இந்த வழக்கை முடித்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது சித்தி பாரதி தேவி தரப்பு வழக்கறிஞர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

பாரதி தேவி, அஞ்சலியை சில படங்களில் நடிக்க வைப்பதற்காக அஞ்சலி சார்பாக அட்வான்ஸ் தொகையை பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் இருப்பதாவும், அதனால் அஞ்சலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வைக்க வேண்டும் என்றும் பாரதிதேவியின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து வரும் 9ம் தேதியன்று அஞ்சலியை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காவல் துறைக்கும் இது சம்பந்தமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Read Previous

‘TEA’ விளம்பர விருதுகள் அறிமுகம்

Read Next

15 கோடி ரூபாய் படத்தில் ஜெய்…