கிளவுட் நைன் மூவீஸ் தயாநிதி அழகிரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட் இயக்கத்தில் ஜெய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்த படம் 15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட உள்ளது. இதுவரை ஜெய் நடித்த படங்களிலேயே அதிகபட்ச செலவு செய்து தயாரிக்கப் போகும் படம் இது என்பதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் ஜெய்.
‘கொலவெறி’ புகழ் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
சமீப காலமாக ஜெய், பெரிய நிறுவனங்களில் படத்தில் நடித்து வருகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, போட்டோன் கதாஸ் தயாரிப்பில் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்,’ ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பில் ‘ராஜா ராணி’, ஏஜிஎஸ் தயாரிப்பில் ‘சரஸ்வதி சபதம்’ , இப்போது கிளவுட் நைன் நிறுவனம்.
அப்ப இனிமே ஜெய்க்கு, ஜெயம்தான்…