இசையமைப்பாளராக காரணம் இளையராஜா – தேவி ஶ்ரீ பிரசாத்

ilayaraja-and-devi-sri-prasadதெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரும், தமிழில் அவ்வப்போது சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிக்க வைக்கும் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத்துக்கு இன்று பிறந்த நாள்.

இவர் இளையராஜாவின் தீவிர ரசிகர்.

தான் இசையமைப்பாளர் ஆவதற்குக் காரணம் இளையராஜாதான் என்கிறார் தேவி ஶ்ரீ பிரசாத்.

“நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். எனது அப்பா தெலுங்கு திரைப்பட எழுத்தாளர். என்னுடைய பாட்டி ஒரு கர்நாடக இசைப் பாடகி.

திரையுலகத்துடன் மிகவும் நெருக்கமான குடும்பம் எங்களுடையது. எங்கள் வீடு எப்போதுமே இசையல் நிரம்பியிருக்கும். இப்படித்தான் சிறு வயதில் இளையராஜா பாடல்களை எனது அப்பா எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இளையராஜா இசையமைத்த ‘Nothing But Wind and How to Name It’ இரண்டு இசை ஆல்பங்களை எனது அப்பா எனக்கு கொடுத்தார். அன்று முதல் அவருடைய பாடல்களை திரும்பத் திரும்பக் கேட்டு ரசிப்பேன்.

ஒரு காலகட்டத்தில் அந்த பாடல் வரி ஆரம்பிப்பதற்கு முன்னரே அது இளையராஜா பாடல்தான் என சொல்லும் அளவிற்கு மாறி விட்டேன்.

வளர வளர அவருடைய அனைத்துப் படங்களையும் பார்த்து விட்டேன். அவருடைய பின்னணி இசை மீது காதல் கொண்டேன்.

அதுதான் என்னை ஒரு இசையமைப்பாளராக மாற வைத்தது,” என்று பெருமையுடன் கூறுகிறார் தேவி ஶ்ரீ பிரசாத்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டிஎஸ்பி…

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

‘தலைவா’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்

Most Popular