வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ‘தலைவா’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதை பாதுகாப்பு கருதி நிறுத்தப் போவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இன்று சென்னையிலுள்ள ஐநாக்ஸ் திரையரங்கிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து திரையரங்குகளில் சோதனை நடைபெற்றது.
இதையடுத்து சென்னையில் ‘தலைவா’ வெளியாகும் திரையரங்குகளில் முன்பதிவு நிறுத்தப்பட்டது.
தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. திரையரங்க உரிமையாளர்களும் கூடிப் பேசியுள்ளனர்.
இதன் முடிவில் “திரையங்குகளுக்கு பாதுகாப்பு அவசியம் என்பதாலும், அரசின் ஒத்துழைப்பு இந்த விஷயத்தில் தேவைப்படுவதாலும், படத்தை திரையிடுதில்லை” என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.