இனி…பாடுபவர்களுக்கும் ராயல்டி…

isra press meet_00001

தொலைக்காட்சி,வானொலி,இணையதளங்கள், மொபைல் கம்பெனிகளில் பயன்படுத்தப்படும் திரையிசைப் பாடல்களுக்கு , இனி, அந்த பாடலைப் பாடிய பின்னணிப் பாடர்கள், பாடகிகளுக்கும் ராயல்டி கொடுக்க வேண்டும்.

இதற்காக ‘இஸ்ரா’ (ISRA – Indian Singers Rights Association) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ராயல்டி இதுநாள் வரை இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு மட்டுமே சென்று கொண்டிருந்தது. இவர்களுக்கான அமைப்பான ‘ஐபிஆர்எஸ்’ (IPRS – The Indian Performing Right Society Ltd.,) மூலம் ராயல்டி தொகை அவர்களுக்குச் சென்று சேர்ந்துவிடும்.

கடந்த ஆண்டு, பின்னணி பாடுபவர்களுக்கும் உரிமை உண்டு என ‘காப்பிரைட்’  சட்டத் திருத்தம் செய்யப்ட்டது.

அதைத் தொடர்ந்து இந்திய அளவில் ‘இஸ்ரா’ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பி. சுசீலா, வாணி ஜெயராம், கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்ரமணியம், மனோ, ஹரிஹரன், சுஜாதா, ஸ்ரீனிவாஸ், கார்த்திக், மஹதி, திப்பு, ஹரிணி, சைந்தவி, பிரசன்னா, எஸ்.பி.பி. சரண், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பல இளம் பின்னணிப் பாடகர், பாடகிகள் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர்.

1963ம் ஆண்டு முதல் வெளியான திரைப்படப் பாடல்களிலிருந்து இவர்களுக்கான ராயல்டி தொகை கிடைக்கும். அதற்கு முன் வெளியான திரைப்படப் பாடல்கள் இந்த சட்டத்திருத்தத்தில் சேர்க்கப்படவில்லை.

“இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரது வருமானத்தில் நாங்கள் பங்கு போடவில்லை, எங்களுக்காக தனியாக வருமானத்தை ஏற்படுத்தித் தரும் அமைப்பாகவே ‘இஸ்ரா’ இருக்கப் போகிறது என அனைவரும் ‘கோரஸாக’ தெரிவித்தனர்.”

இதன் மூலம், தொலைக்காட்சி, வானொலி, இணையதளங்கள்,மொபைல் கம்பெனிகள் இனி கூடுதலான தொகையை செலவிட வேண்டி வரும்.

Read Previous

ஜீவா – நஸ்ரியா நடிக்கும் ‘நீ நல்லா வருவடா…’

Read Next

ஜெய் திறமையான நடிகர் – ஏ.ஆர். முருகதாஸ்

Most Popular