ஜெய் திறமையான நடிகர் – ஏ.ஆர். முருகதாஸ்

raja rani jai nayanthara‘ராஜா ராணி’ திரைப்படத்தின் இசை வெளியீடு 23ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தினசரி ஒரு செய்தியாக கொடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த படத்தின் மக்கள் தொடர்பாளர்.

ஆர்யா – நயன்தாரா திருமண பத்திரிகை மூலம் பரபரப்பை ஏற்படுத்தியதைப் போல, தினமும் ஒரு செய்தியை வரவைத்து படத்திற்கு செலவில்லாத விளம்பரத்தை செய்ய நினைத்து விட்டார்கள் போலும்.

அந்த விதத்தில் இன்றைய செய்தி விளம்பரம், ஜெய்யை இப்படத்தின் தயாரிப்பாளரான, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பாராட்டிய செய்தி இதோ…

“என்னுடைய தயாரிப்பில் வெளியான ‘எங்கேயும் எப்போதும் ‘ படத்திலேயே  அவருடைய  நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. மிகவும் தொழில் பக்தி உள்ள, நேர்மையான , திறமையான நடிகராவார். என்னுடைய கணிப்பின் படி அவர் பெரிய அளவில் பிரகாசிக்க வேண்டிய நடிகர் , நிச்சயம் பிரகாசிப்பார். ‘ராஜா ராணி’ படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் அவருக்கென மிகவும் பொருத்தமாக  உள்ளது,”  என்றார் .

நாளை செய்தி…நிச்சயம்..நயன்தாரா அல்லது நஸ்ரியா பற்றியதாக இருக்கும்….

Read Previous

இனி…பாடுபவர்களுக்கும் ராயல்டி…

Read Next

தலைவா – விமர்சனம்