ஜெய்யை ஓரம் கட்டிய ‘ராஜா ராணி’ குழுவினர்…

raja rani 2_00005ரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் படம் என்றாலே கண்டிப்பாக பிரச்சனைதான் வரும் என்பதை 999வது முறையாக நிரூபித்திருக்கிறது ‘ராஜா ராணி’ திரைப்படம்.

இப்படத்தில் ஆர்யா, ஜெய் என இரண்டு ஹீரோக்கள். ஆனால், இதுநாள் வரை இப்படம் சம்பந்தப்பட்ட ஆடியோ வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு என எதிலுமே ஜெய் கலந்து கொள்ளவில்லை.

இதைப் பற்றி விசாரித்த போது, படக்குழுவினர் வேண்டுமென்றே ஜெய்யை புறக்கணித்து வருவதாகத் தெரிகிறது.

படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஜெய் நடித்த பல நல்ல காட்சிகளை வேண்டுமென்றே வெட்டி எறிந்து விட்டாராம் இயக்குனர் அட்லி.

அது மட்டுமல்ல படத்தின் விளம்பரங்களில் கூட ஆர்யா நடிக்கும் ‘ராஜா ராணி’ என்றுதான் விளம்பரப்படுத்தினார்களாம்.

அதைப் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது அவர் தயாரிப்பு நிறுவனத்தின் மீது பழி போட்டாராம்.

இதற்கு முன் ஜெய் இதே நிறுவனத்தின் ஹிட் படமான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்திருந்ததால், அவர்களும் ஆரம்பத்திலேயே ஜெய்க்கு உரிய முக்கியத்துவம் தருகிறோம் என்றுதான் சொன்னார்களாம்.

அதன் பின் படத்தின் அனைவரது பார்வையுமே ஆர்யா – நயன்தாரா பக்கம் வலுக்கட்டாயமாக திரும்ப வைக்கப்பட்டதாம்.

இருந்தாலும் படம் வெளிவந்த பின் தன்னைப் பற்றி அனைவரும் பாராட்டுவதை அறிந்து ஜெய் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

இன்று எப்படியும் ஜெய்யை வம்புக்கிழுக்காமல் விட மாட்டார்கள் பத்திரிகையாளர்கள்…

Read Previous

‘இவன் வேற மாதிரி’ இசை – விரைவில்

Read Next

ரஜினிக்கு சம்பளம் ரூ.2500, கமலுக்கு ரூ.27000…

Most Popular