கிரிக்கெட்டை விட்டு சச்சின் டென்டுல்கர் ஓய்வு பெற்றதையடுத்து, கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள நமது நடிக, நடிகையரும் அவர்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் கூறியிருக்கிறார்கள். அவற்றிலிருந்து சில…
தனுஷ்
“இன்னொரு இன்னிங்ஸ் இல்லை என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும் “சச்சின்..சச்சின்…” என்ற கோஷம் மட்டும் ஓயவே ஓயாது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.
சிம்பு
“நன்றி சச்சின்…உங்களை மிஸ் பண்ணுகிறோம்..”
ஜீவா
“சொல்ல வார்த்தையே இல்லை…உங்களை மிஸ் பண்ணுகிறோம் சச்சின்..அற்புதமான பேச்சு..உங்களது பேச்சைக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் அதை ரெக்கார்ட் செய்துள்ளேன். எத்தனை பேர் அதை செய்திருக்கிறீர்கள்..”
ஜெயம் ரவி
“படப்பிடிப்பில் இருக்கிறேன். அந்த அற்புத தருணத்தை பார்க்க முடியாமல் போய்விட்டது. சச்சின் இல்லாமல் கிரிக்கெட் இல்லை..சல்யூட் சார்…”
சிவகார்த்திகேயன்
“இன்னும் அழுது கொண்டிருக்கிறேன் சச்சின். 24 வருடங்களாக எங்களை மகிழ்வித்ததற்கு என்னால் கண்ணீரை மட்டுமே திரும்ப அளிக்க முடியும். மற்ற வீரர்களை பெருமைப்பட வைத்தது கிரிக்கெட். ஆனால், சச்சின், நீங்கள்தான் கிரிக்கெட்டை பெருமைப்பட வைத்தீர்கள். நன்றி சச்சின்…”
பிரகாஷ்ராஜ்
“என்னுடைய சச்சின் இல்லாமல் கிரிக்கெட்டா…?. இந்த இழப்பை ஈடு செய்ய நீண்ட நாட்களாகும். நன்றி சச்சின்…பெருமைக்குரியவரே நன்றி…”.
சமந்தா
“சச்சினின் பேச்சு அருமை…ஒரு மனிதனின் பயணம்… ஒரு நாட்டுக்கே ஊக்கமளிக்கும் பேச்சு…”
பிரியாமணி
“உசைன் போல்ட் – ஓட்டம், முகம்மது அலி – பாக்சிங், ஷாரூக்கான் – நடிப்பு , சச்சின் டென்டுல்கர் – கிரிக்கெட். அந்த மாமனிதன் இல்லாமல் கிரிக்கெட் அப்படியே இருக்க முடியாது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சோகமான நாள், குறிப்பாக சச்சின் ரசிகர்களுக்கு.”
இயக்குனர் வெங்கட் பிரபு
“நன்றி சச்சின்…எல்லாவற்றிற்கும்…கடவுள் இல்லாமல் கிரிக்கெட்டை நினைத்துப் பார்க்க முடியவில்லை.”
மேற்சொன்ன அனைவருமே நேற்று உடனுக்குடன் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியவர்கள். மேலும், சிலரது கருத்துக்கள் என்னவாக இருக்கும் என தேடிப் பார்த்தோம். ம்ம்ம்…அவர்களுக்கு சச்சின் யாரென்றே தெரியாது போல…
நன்றி சச்சின்…நன்றி சச்சின்…நன்றி சச்சின்….
