அஜீத் குமாரின் நடிப்பில், வரும் பொங்கலுக்கு வெளி வரும் ‘ வீரம் ‘ படத்தின் வெளியீட்டு தேதி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளி வந்ததில் இருந்தே படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு கூடி வந்துக் கொண்டு இருக்கிறது.
அவரது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு உள்ள அவரது தோற்ற பொலிவும் , கிராமிய களம் கொண்ட கதை கருவும் அவரது ரசிகர்களுக்கு ஒரு சரியான பொங்கல் விருந்து உத்திரவாதம் என உறுதி அளித்தது.
‘வீரம் ‘ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முற்று பெற உள்ளது.
மிக பிரம்மாண்டமாக , பல்வேறு நட்சத்திர குவியலுடன் படமாக்கப்பட்டு வரும் ‘ வீரம் ‘ நிச்சயம் பொங்கலுக்கு ரசிகர்களை மகிழ்ச்சி ஊட்டும் என பட தயாரிப்பாளர்கள் வெங்கட்ராம ரெட்டி மற்றும் பாரதி ரெட்டி உறுதியாக கூறினார்.