சற்று முன்னர்தான் , பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்புவின் ஜோடியாக நயன்தாரா நடிக்கப் போகிறார் என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம்.
அதே சமயம், சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டதாகவும் ஒரு செய்தி நம் காதில் வந்து விழுந்தது.
சில மாதங்களுக்கு முன் சிம்பு, ஹன்சிகா இருவருமே ஒருவரை ஒருவர் காதலிப்பதாக அறிவித்தனர்.
ஆனால், அதன் பின்தான் பல விஷயங்கள் நடந்ததாகத் தெரிகிறது. ஹன்சிகாவின் அம்மாவிற்கு இந்த காதல் விவகாரத்தில் துளி கூட விருப்பமில்லாமல் இருந்ததாம்.
அவர்தான் இவர்களது காதலுக்கு எதிராக இருந்து இருவரும் பிரிய காரணமாக இருந்தார் என்கிறார்கள்.
ஹன்சிகா தற்போது ஏழெட்டு படங்களில் ஹீரோயினகா நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் இப்போது அவருக்கென தனி பெயரும், புகழும் கிடைத்து வருகிறது. அதை அவ்வளவு சீக்கிரம் அவர்கள் இழக்க விரும்பவில்லையாம்.
சிம்புவும் இந்த பிரிவை ஏற்றுக் கொண்டு விட்டதாகச் சொல்கிறார்கள்.
அவரும் இப்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். மீண்டும் ஒரு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ போன்ற வெற்றிக்கு தயாராகி வருகிறார்.
காதலுக்கும் காலத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு போல…
பிரிந்தவர்கள் இணைகிறார்கள்…இணைந்தவர்கள் பிரிகிறார்கள்…