சிம்பு ஜோடியாக மீண்டும் நயன்தாரா…நம்புங்க..உண்மைதான்…

simbu-and-nayantharaசிம்பு , இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் “வாலு, வேட்டை மன்னன், பாண்டிராஜ் இயக்கும் படம், கௌதம் மேனன் இயக்கும் படம்”.

இவற்றில் “வாலு, வேட்டை மன்னன்’ படங்களில் ஹன்சிகாதான் கதாநாயகி.

பாண்டிராஜ் இயக்கும் படத்தின் ஹீரோயினாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

நேற்று நயன்தாரா பிறந்த நாள், அதையொட்டி சிம்புவும், பாண்டிராஜும், நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

நேற்று, நாம் இயக்குனர் பாண்டிராஜிடம் பேசும் போது கூட, வெயிட் பண்ணுங்க, இன்னும் இரண்டு நாள்ல ஹீரோயின் யாருன்னு சொல்லிடறோம், என்றார்.

ஆனால், அவர் இரண்டொரு நாட்கள் எல்லாம் காத்திருக்க வைக்கவில்லை, சற்று முன்னர் பாண்டிராஜே இதை அறிவித்துள்ளார்.

வாட் ஏ சர்ப்ரைஸ்….

Read Previous

சிவகார்த்திகேயன் ஜோடியாக அமலா பால் ?

Read Next

சிம்பு – ஹன்சிகா பிரிந்தனர்…?

Most Popular