தொடர்ச்சியாக ‘ஹிட் ’ படங்களைக் கொடுத்து வசூல் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்.
தற்போது, ‘மான் கராத்தே’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஹன்சிகா.
என்னது ? , சிவகார்த்திகேயன் ஜோடியா ஹன்சிகாவா என ஆச்சரியப்பட்டவர்கள் மேலும் ஆச்சரியப்படும் விதத்தில் அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கவிருக்கிறாராம்.
சிவகார்த்திகேயன், அடுத்து நடிக்கவிருக்கும் ‘டானா’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அமலா பால், விஜய் ஜோடியாக ‘தலைவா’ படத்தில் நடித்தவர். தற்போது தனுஷ் ஜோடியாக ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தில் நடித்து வருகிறார்.
ஹன்சிகா, அமலா பால் இருவருமே விஜய் ஜோடியாக நடித்தவர்கள்தான்.
இப்படி விஜய்யுடன் ஜோடியாக நடித்தவர்கள் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிப்பது திட்டமிட்டே நடக்கிறதா எனத் தெரியவில்லை.
ஆனால், ஹீரோயின்கள் விஷயத்தில் நான் தலையிடுவதேயில்லை என்கிறார் சிவகார்த்திகேயன்.
சொல்ல முடியாது, சீக்கிரமே காஜல் அகர்வால் , சிவகார்த்திகேயன் ஜோடியா நடிச்சாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை…