‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுவாரா ஆர்யா ?

arya irandam ulagam“ராஜா ராணி, ஆரம்பம்’ ஆகிய இரண்டு தொடர் வெற்றிகள் கொடுத்த ஆர்யாவின் அடுத்த படமாக ‘இரண்டாம் உலகம்’ இந்த வாரம் வெளியாக உள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத் இருவரது இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் உலகம் முழுவதும் 1200 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாக உள்ளது.

அதே நாளில், தெலுங்கில் ‘வர்னா’ என்ற பெயரில் வெளியாகிறது.

தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப் படங்களில் நடித்த ஆர்யாவுக்கு ‘இரண்டாம் உலகம்’ படம் ஹாட்ரிக் வெற்றியைக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

அதன் பின் ‘ஹாட்ரிக் நாயகன் ஆர்யா’ என தாராளமாக ஒரு செய்தியை போடலாம்…

Read Previous

தனுஷ் ஜோடியாக கமல்ஹாசனின் இளைய மகள்…

Read Next

சிவகார்த்திகேயன் ஜோடியாக அமலா பால் ?