வெற்றி மாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில், தனுஷ், டாப்ஸீ மற்றும் பலர் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்த ‘ஆடுகளம்’ , தனுஷுக்கு தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது.
இப்படம் பற்றிய சில உண்மைகளை இயக்குனர் வெற்றி மாறன், நேற்று நடைபெற்ற ‘மத யானைக் கூட்டம்’ படத்தின் இசை வெளியீட்டில் சொன்னார்.
அவர் பேசியதாவது,
“ஆடுகளம்’ படம் மதுரைத் தன்மையோட இருக்குன்னா அதுக்கு 80 சதவீதம் காரணம் விக்ரம் சுகுமாரன்தான். அந்த படத்துல ரொம்ப ரசிக்கப்பட்ட பல விஷயங்களுக்கு சொந்தக்காரரும் அவர்தான். உதாரணத்துக்கு சில டயலாக்ஸ்..
“சுனாமியிலயே நாங்க ஸ்விம்மிங் போடுவோம்,’கற வசனம் எழுதினது அவர்தான். “ஒத்த சொல்லா…’ பாட்டுக்கு டான்ஸ் மூவ்மென்ட் பண்ணதும் விக்ரம் சுகுமாரன்தான்.
ஆக்சுவலா வசனம் எழுதிக் கொடுக்கத்தான் விக்ரம் சுகுமாரன் வந்தாரு. அது மட்டும் பண்ணா நல்லா இருக்காதுன்னு படம் ஃபுல்லா வேலை பார்த்து, டப்பிங் வரைக்கும் இருந்தாரு.
‘ஆடுகளம்’ படத்துல எல்லா கிரெடிட்டும் எனக்கு வரும்னு தெரிஞ்சாலும் எனக்காக வேலை பார்த்துக் கொடுத்தாரு,” என விக்ரம் சுகுமாரனைப் பாராட்டினார்.
அப்படி வெற்றி மாறன் பாராட்டிய விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் டிரைலரும், பாடல்களும் அனைவரது பாராட்டையும் பெற்றது.
விரைவில் வெளிவர உள்ள இப்படம் தமிழ் சினிமாவில் புதிய தடம் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.