ரன்வீர் சிங் கக்வால் வழங்கும் வாரியர்ஸ் கிளான் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘என் உயிர் என் கையில்’ படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி ‘என் உயிர் என் கையில்’ படத்தின் டிரைலரை வெளியிட ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்தின் இயக்குனர் –இசையமைப்பாளர் எஸ் எஸ் குமரன் பெற்றுக்கொண்டார்.
‘என் உயிர் என் கையில்’ இயக்குனர் ராகுல் சிங் காக்வால் பேசும் போது, “ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் எடுத்திருக்கிறோம்.
படத்தின் கதாநாயகன் ஜெய் ஆகாஷ் தமிழகத்தைச் சேர்ந்த டெல்லியில் பணிபுரியும் ஒரு ஆடிட்டராக வருகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கண் முழித்துப்பார்க்கும் போது மூன்றுக்கு மூன்று அடி கொண்ட பெட்டியில் அவரை அடைத்திருக்கிறார்கள்…
அவர் ஏன்..? எதற்காக..? யாரால்..? இப்படி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறோம்.
படம் முழுவதும் ஒரே நடிகர் தான் மேலும் மிகவும் குறைந்த இடத்தில் படம் பிடிக்கப்பட்ட இந்தியத் திரைப்படம் என்கிற சாதனையை இந்தப்படம் நிகழ்த்தியிருக்கிறது,” என்றார்.
விழாவில் என் உயிர் என் கையில் படத்தின் கதா நாயகன் ஜெய் ஆகாஷ், வசனகர்த்தா சித்தார்த், ஜெய் ஆகாஷுடன் ‘ஆனந்தம் ஆரம்பம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மிஸ் இந்தியா போட்டியாளர் ஆலிஷா, நடிகை இந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.