ஜோதி விநாயகர் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக “மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா”படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையை வெளியிட கே.ஆர்.பெற்றுக்கொண்டார்.
விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர் பேசும் போது,
“விஜய்சேதுபதி எந்த தயாரிப்பாளரும் நஷ்டத்தையோ மன வருத்தத்தையோ கொள்ளும்படியான விஷயங்களில் நான் ஈடு பட மாட்டேன் என்று அவர் அளித்திருந்த பேட்டி பற்றி பலர் பேசினார்கள்.
எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையக் கூடாது என்று ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதற்குப் பிறகு விஜய் சேதுபதி அது மாதிரி செயல் படுகிறார்.மற்றவர்களும் இது மாதிரி செயல்பட்டால் நல்லது,” என்றார்.
விஜய் சேதுபதி பற்றி சமீப காலமாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பல விழா மேடைகளில் தொடர்ந்து பாராட்டிப் பேசி வருகிறார்.
அவர் மட்டுமல்ல பலரும், விஜய் சேதுபதி அவருக்குக் கிடைக்கும் வெற்றியை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.
எப்போதும் போல் ஒரே மாதிரி இருந்தால் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்கப் போவது நிச்சயம்…