P.சங்கையா வழங்கும் ரவி பிரசாத் புரொடக்சன்ஸ் தயாரித்து வரும் படம் “என்னமோ ஏதோ”.
இந்த படத்தின் இரண்டு பாடல்கள் படப்பிடிப்பு சமீபத்தில் பாங்காக்கில் நடந்தது.
ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ள இப்படத்தில் டி.இமான் இசையில் கார்க்கி பாடல் வரிகளில் ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலையும், நடிகை ஸ்ருதி சுருதி ஹாசன் மற்றொரு பாடலையும் பாடியுள்ளனர்.
மெல்லிய காதல் கதையான இப்படத்திற்கு மேலும் சிறப்பு வகையில் வைக்கம் விஜயலக்ஷ்மி ஒரு பாடலை நேற்று பாடினார்.
கொச்சினில் இப்பாடல் பதிவு நடைபெற்றது. ‘செல்லுலாயிட்’ என்ற மலையாளப் படத்தில் “காற்றே காற்றே நீ” என்ற பாடலை பாடி அனைவரையும் கவனிக்க வைத்தவர். கண்பார்வையற்றவரான இவர் காயத்திரி வீணை மீட்டுவதிலும் வல்லவர். மலையாள நாட்டின் பொக்கிஷம் என்று இவரை ரசிகர்கள் குறிப்பிடுவார்கள்.
P.ரவிகுமார், P.V.பிரசாத் தயாரித்து வரும் இப்படத்தை ரவி தியாகராஜன் டைரக்ட் செய்து வருகிறார்.
கவுதம் கார்த்திக், ராகுல் பிரீத்சிங், நிகிஷா படேல் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
வாழ்த்துகள் இமான்…புதுப் புது திறமைசாலிகளை அங்கீகரிக்கிறீர்கள்..