வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடித்த ‘மங்காத்தா’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழித்து, வெங்கட் பிரபு அடுத்து இயக்கியுள்ள ‘பிரியாணி’ டிசம்பர் 20ம் தேதியன்று வெளியாக உள்ளது.
இந்த படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு , சூர்யா நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே நேற்று வெங்கட் பிரபுவிடம் பேசும் போது அவர் , ‘‘மங்காத்தா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அஜித் சார் அடுத்த ஆண்டு முழுவதும் பிசியாக இருக்கிறார். காலம் கூடி வந்தால் ‘மங்காத்தா 2’ஐ ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
‘மங்காத்தா’ படத்தை எடுக்கும் போதே நான் இரண்டு விதமான கதைகளை வைத்திருந்தேன். கடைசியில் நீங்கள் பார்த்த கதையைத்தான் ‘மங்காத்தா’வின் கதை என முடிவு செய்தோம்,” என்றார்.
அஜித் மனது வைத்தால் மீண்டும் ஒரு ‘மங்காத்தா’ ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.