சூர்யாவும், வெங்கட் பிரபுவும் அடுத்து இணையவிருக்கிறார்கள் என்ற செய்தியை இரண்டு நாட்களுக்கு முன் நமது இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியிருந்தோம்.
அதன் படி இன்று முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தின் மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறியுள்ளார்கள்.