விஜய் படத்தில் எப்போதுமே பாடல்கள் ‘சூப்பர் ஹிட்’ ஆக அமைவது வழக்கம்.
‘ஜில்லா’ படத்திற்கு இசையமைத்து வரும் இமான் , விஜய் படம் ஒன்றிற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைத்து வருவதால், தனி கவனத்துடன் அவருடைய பணிகளை செய்து வருகிறார்.
விஜய் படங்களில் இடம் பெறும் பாடல்களில் அவருடைய அறிமுகப் பாடல் எப்போதுமே தனி ரகம். ஆட்டம், பாட்டம் என அட்டகாசமாக இருக்கும்.
அதன்படி இந்த படத்திலும் அப்படி ஒரு பாடல் இடம் பெறுகிறதாம். ஆனால், ஒரு வித்தியாசம். இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து மோகன்லாலும் ஆடுகிறாராம்.
அந்த பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் சங்கர் மகாதேவன் பாடியிருக்கிறார்கள். யுகபாரதி பாடலை எழுதியிருக்கிறார்.
இப்போதே சொல்லலாம் அந்த பாடல் ஹிட் ஆகி விடும் என்று…
