‘அது இது எது’ என தொலைக்காட்சியில் ‘சிவனே’ என தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சிவகார்த்திகேயன்.
தனுஷ், அவரை ‘3’ படத்தில் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதோடு நில்லாமல் அவர் தயாரித்த ‘எதிர் நீச்சல்’ படத்திலும் நாயகனாக நடிக்க வைத்தார்.
அது மட்டுமல்ல இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளமாகக் கொடுத்து சிவகார்த்திகேயன் மார்க்கெட் உயரவும் காரணமாக இருந்தார்.
இந்த ஆண்டில் அதிக வெற்றிகளைக் கொடுத்த ஒரே ஹீரோ சிவகார்த்திகேயன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய மூன்று படங்களும் ‘பாக்ஸ் ஆபிஸ்’-ல் மாபெரும் வெற்றி பெற்று 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளியது.
ஆனால், தனுஷ் நடித்து வெளிவந்த ‘மரியான், நய்யாண்டி’ இரண்டு படங்களுமே மாபெரும் தோல்விப் படங்களாக அமைந்தன.
இதுவே இவர்களுக்குள் பிரிவு வர காரணமாக அமைந்துவிட்டது என்கிறார்கள்.
தனுஷின் நெருங்கிய வட்டாரங்களுக்கு அவர் சிவகார்த்திகேயனை வளர்த்து விடுவது பிடிக்கவில்லையாம். அவர் நடித்துள்ள படங்கள் எல்லாமே நீங்கள் நடிக்க வேண்டிய படங்களைப் போலவே உள்ளன. உங்களுக்குப் போட்டியாக நீங்களே ஒருவரை உருவாக்கி, தோல்வியை சந்தித்துக் கொள்கிறீர்களே என்கிறார்களாம்.
தனுஷுக்கும் , சிவகார்த்திகேயனுக்கும் அதிக பட்ச வித்தியாசமே உயரம் மட்டும்தான். தனுஷை விட சிவகார்த்திகேயன் கொஞ்சம் உயரமானவர், அவ்வளவுதான் வித்தியாசம் என்கிறார்களாம்.
தனுஷ், சிவகார்த்திகேயனை மீண்டும் ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ள நிலையில் லேசாகப் புகைய ஆரம்பித்துள்ள இந்த விவகாரம் தீப்பிடித்து எறியும் என்கிறார்கள்.
ஜெயிக்கப் போவது நட்பா, சுற்றமா என்பது போகப் போகத் தெரிந்துவிடும்…