திருப்பதி பிரதர்ஸ், யு டிவி தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அஞ்சான்’.
“ஆனந்தம், ரன், சண்டக் கோழி, பீமா, பையா, வேட்டை” படங்களுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் படம் இது.
இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நடைபெற உள்ளது.
இதுவரை தமிழ் சினிமா படப்பிடிப்பு நடைபெறாத பல இடங்களைக் கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தப் போகிறார்களாம்.
மும்பையில் முதல் கட்டமாக 35 நாட்கள் நடந்த ‘அஞ்சான்’ படப்பிடிப்பு அண்மையில்தான் முடி வடைந்தது.
அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு இம்மாதக் கடைசியில் ஆரம்பமாகி கோவா மற்றும் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது.
படத்தைப் பற்றி இயக்குனர் லிங்குசாமி கூறுகையில்,
“இந்தப் படம் பட்ஜெட்டாலும், நட்சத்திரங்களாலும், படப்பிடிப்பு இடங்களாலும் தமிழ்த் திரையுலகம் இதுவரை காணாத வகையில் இருக்கும். இப்படம் மிகப் பெரிய மாஸ் எண்டர்டெய்னராக, ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். ஆகஸ்ட் 2014 ல் வெளிடத் திட்டமிட்டுளோம்,” என்று நம்பிக்கையுடன் இயக்குனர் லிங்குசாமி கூறுகிறார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ‘அஞ்சான்’ ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.