‘கொல வெறி’ புகழ் இசையமைப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர் ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார்.
‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தை இயக்கிய பாலாஜி மோகன் தற்போது இயக்கி வரும் படம் ‘வாய் மூடிப் பேசவும்’.
இப்படத்தின் மூலம் மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நஸ்ரியா நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்காக இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
ஆனால், அதன் பின் எந்த காரணமும் சொல்லாமல் இந்த படத்திலிருந்து பின் வாங்கியிருக்கிறார் அனிருத்.
அனிருத் ஒப்புக் கொண்டபடி பாடல்களை இசையமைத்துக் கொடுக்காததால் படத்தின் தயாரிப்பில் பெரும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால், படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி தொடர்ந்து நடத்த முடியாமல், கால தாமதம் ஏற்பட்டு வருகிறதாம்.
அது மட்டுமல்ல, இப் படத்திற்காக அனிருத் கை நீட்டி அட்வான்ஸ் வேறு வாங்கியிருக்கிறாராம். அந்த அட்வான்சையும் திருப்பித் தராமல், தயாரிப்பு நிறுவனத்திலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அதற்கு பதிலும் அளிக்காமல் தவிர்த்து வருகிறாராம்.
‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு செல்வராகவன் , ஹாரிஸ் ஜெயராஜை கழட்டி விட்டபின் அந்த படத்தை பெரிதும் நம்பி பின்னணி இசையமைத்துக் கொடுத்தால் அனிருத். ஆனால், அப்படம் வந்ததும் தெரியாமல் ஓடிப் போனது.
இன்னும் ஐந்து படம் கூட பெருசா ஓடலை, அதுக்குள்ள இப்படியா…என கோடம்பாக்கத்தில் பேச்சு உலவுகிறதாம்…