பாலா இயக்கிய “சேது, பிதாமகன், நான் கடவுள்’’ ஆகிய படங்கள் பேசப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் இளையராஜாவின் இசை.
பாலா இயக்கிய “நந்தா, அவன் இவன்” ஆகிய படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமத்தார். ஒரு பாடலைத் தவிரமற்ற பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை. பின்னணி இசையும் கவரவில்லை.
தற்போது பாலா, சசிகுமார் நடிக்க கரகாட்டத்தை மையமாக வைத்து இயக்கும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமாரைத்தான் இசையமைப்பாளராக நியமித்தாராம். சில பாடல்களின் ஒலிப்பதிவும் நடந்ததாம். ஆனால், ‘பென்சில்’ படத்தில் நாயகனாக நடிப்பதால் ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தின் இசையில் அதிக ஆர்வம் காட்டவில்லையாம்.
இதனால், கோபமடைந்த பாலா அத்துடன் ஜிவியையும், அந்த பாடல்களையும் தூக்கிப் போட்டு விட்டு, இளையராஜாவிடம் சென்று இசையமைக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அவரும் இசையமைக்க சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.
அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையா ஆகிடக் கூடாது ஜிவிக்கு….