திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி – விஷ்ணு இணைந்து நடிக்கும் புதிய படம் ‘இடம் பொருள் ஏவல்.“
இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும், வைரமுத்துவும் முதன் முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர்.
“தென்மேற்குப் பருவக்காற்று, நீர் பறவை’ படங்களுக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கும் படம் இது.
தயாரிப்பாளர் லிங்குசாமி, இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோரின் விருப்பத்திற்கிணங்க வைரமுத்துவும், யுவனும் இணைந்து பணிபுரிய சம்மதித்துள்ளனர்.
இப்படத்தில் இடம் பெறும் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.
படப்பிடிப்பு அடுத்த மாதம் கொடைக்கானலில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.