பல வெற்றிப் படங்களை வழங்கிய முக்தா ஆர்.கோவிந்த் தனது முக்தா என்டர்டைன்மென்ட்(பி) லிட், புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ்(பி)லிட்., பட நிறுவனங்கள் இணைத்து வழங்க ‘கழுகு’ வெற்றிப் படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் “சிவப்பு”
“நம்மள நம்பி வந்தவங்களை வச்சி காப்பாத்துங்க, இல்லை கை விட்டுடுங்க, அவங்களை வச்சி அரசியல் பண்ணாதீங்க…” என்ற டிரைலரில் இடம் பெற்ற ராஜ் கிரண் பேசும் வசனத்தைக் கேட்டு தியேட்டரில் டிரைலரைப் பார்த்த அனைவருமே கைதட்டினார்கள்.
இதுநாள் வரை ஈழத் தமிழ் மக்களை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அவர்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொன்ன படங்கள் என எதுவுமேயில்லை.
மேற்சொன்ன ஒரு வசனம் மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ வசனங்கள் படத்தில் இப்படி இடம் பெற்றுள்ளனவாம்.
இந்த படம் தமிழகத்துக்கு தஞ்சம் தேடி வந்த இலங்கை அகதிகளைப் பின்னணியாகக் கொண்ட ஒரு படம். நிச்சயம் நல்ல ஒரு திரைப்படப் பதிவாக இருக்கும் என்ற நம்பிக்கையை டிரைலரும், இயக்குனர் சத்யசிவாவின் பேச்சும், பத்திரிகையாளர் சந்திப்பில் நமக்குக் கிடைத்தது.
ராஜ்கிரண் அழுத்தமான கதாபாத்திரத்தில் கோனார் என்ற வேடமேற்று இருக்கிறார்.
நாயகனாக நவீன்சந்திரா நடிக்கிறார். கதாநாயகியாக ரூபா மஞ்சரிநடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா, செல்வா, போஸ் வெங்கட், ஏ.வெங்கடேஷ், அல்வாவாசு, பூ ராம் ஆகியோர் நடிக்கிறார்கள்.
“சிவப்பு என்பது நிறம் மட்டுமல்ல பல உணர்ச்சிகளின் உறைவிடம் தான் சிவப்பு . அதில் கோபம்,தோழமை,காதல் வறுமை,புரட்சி என்று நிறைய உணர்வுகளின் உள்ளடக்கம் தான் சிவப்பு நிறம். அதே மாதிரி இந்த திரைக்கதையில் இது அதனையும் இருக்கும்.
அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலமாக இருப்பவர் கோனார். இவரது கட்டுமான நிறுவனத்தில் வேலை கொடுத்து வாழ வைக்கிறார். அங்கே நிகழும் சம்பவங்களின் தொகுப்பே இது.
நவீன்சந்திரா – ரூபாமஞ்சரி காதலும் கவித்துவமான சம்பவமாகப் படைக்கப் பட்டிருக்கிறது.
படப்பிடிப்பு சென்னை, பாண்டி, ஹைதராபாத், தூத்து
‘சிவப்பு’ எத்தனை பேரின் கண்களை சிவக்க வைக்கப் போகிறது என்று பார்ப்போம்…
