அம்மா தயாரிக்க மகள் இயக்கும் ‘சோன்பப்டி’

soan papdi_00006

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் மிகவும் குறைவே. தற்போதுதான் பல படித்த பெண்கள் உதவிய இயக்குனர்களாக பல இயக்குனர்களிடம் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

ஆனால், எந்த பயிற்சியும் எடுக்காமல் நேரடியாகவே ‘சோன்பப்டி’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஒரு பெண். மகளின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அம்மாவே படத்தை தயாரித்து இருக்கிறார்.

அவர் பெயர் ஷிவாணி. இன்ஜினியரிங் படிப்பில் கோல்டு மெடல் வாங்கி,  ஐடி-யில் வேலைக்குச் சேர்ந்தவர் சினிமா ஆசையில் அந்த வேலையை விட்டு விட்டு படத்தை இயக்கியிருக்கிறார்.

பழம் பெரும் தயாரிப்பாளரான ஜீவரத்தினத்தின் பேத்தி இவர்.

“பொதுவாகவே சாதனை புரியும் பெண்களைக் கண்டால் எனக்கு மிகவும் பிடிக்கும். எந்த துறையிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்று நினைப்பவள் நான். வெறுமனே வேலைக்குச் சென்று விட்டு அப்படியே வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று நினைக்க மனம் வரவில்லை.

அதனால்தான் எதையாவது செய்து நாலு பேர் நம்மை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் ஆனேன், ” என்கிறார்.

இந்த படத்தில் ‘வழக்கு எண் 18/9′, மற்றும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படங்களின் நாயகன் ஸ்ரீ நாயகனாக நடிக்கிறார். பிரபல மாடலான நிரஞ்சனா நாயகியாக நடிக்கிறார்.

தன்ராஜ் மாணிக்கம் இசையமைக்க, நா.முத்துக்குமார், அண்ணாமலை பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

கோல்டன் மூவீ மேக்கர் தயாரித்துள் ‘சோன்பப்டி’ திரைப்படம் நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.

Read Previous

அகதிகளின் வாழ்க்கையைச் சொல்கிறதா ‘சிவப்பு’ ?

Read Next

‘கோச்சடையான்’ ஒரு நாள் வசூல் 144 கோடி…?