கோடி கோடியாக சம்பாதிக்கும் ‘கோலி சோடா’

goli soda 0702

ஒரே அடியில ஐந்து பேரை வெட்டி சாய்க்கிற ஹீரோ கிடையாது,  ஃபாரின்ல போய் பாட்டு ஷுட்டிங் நடத்தலை, பிரம்ம்ம்ம்ண்டமான அரங்குகள் கிடையாது, கலர் கலரா உடையணிந்து வர்ற ஹீரோயின்கள் கிடையாது, இதெல்லாம் எதுவுமே இல்லாம ஒரு படம் கோடி கோடியா சம்பாதிக்குதுன்னா சும்மாவா…

அந்த பெருமை விஜய் மில்டன் இயக்கி வெளிவந்திருக்கிற ‘கோலி சோடா’ படத்துக்குக் கிடைச்சிருக்கு.

இரண்டு வாரத்துக்கு முன்னாடி, அதாவது ஜனவரி 24ம் தேதி வெளிவந்த இந்த படம் இரண்டு வாரத்துக்குள்ளயே தமிழ்நாட்டுல மட்டும் 8 கோடி ரூபாய் சம்பாதிச்சிருக்கு.

ஒரு சின்ன பட்ஜெட் படம், இந்த அளவுக்கு வசூல் சாதனை புரிஞ்சிருக்கிறது, வினியோகஸ்தர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும் ரொம்பவே மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அது மட்டுமில்லை, இந்த படத்தோட சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் டிவி 3 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கு.

அப்படிப் பார்த்தால் 11 கோடி ரூபாய் சம்பாதிச்சிருக்கு இந்த படம். இன்னைக்கும் பல புதுப் படங்கள் ரிலீசானாலும் இந்த படத்துக்கு இருக்கிற வரவேற்பு அப்படியேதான் இருக்கு.

‘கோலி சோடா’ – கோடம்பாக்கத்தின் தாகத்தை தீர்த்திருக்கு…

Read Previous

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்

Read Next

சினிமால பாடம் கத்துக்கிட்டேன் – நயன்தாரா

Most Popular