இன்று 7 பிப்ரவரி 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்..
புலி வால்
மேஜிக் பிரேம்ஸ் தயாரிப்பில் ஜி.மாரிமுத்து இயக்கத்தில் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள படம். பிரசன்னா, விமல், ஓவியா, அனன்யா, சூரி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
பண்ணையாரும் பத்மினியும்
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள படம். விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
உ
பீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆஷிக் இயக்கத்தில் அபிஜித் ராமசுவாமி இசையமைத்துள்ள படம். தம்பி ராமையா, வருண், மதன் கோபால், ‘ஸ்மைல்’ செல்வா, சத்ய சாய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
கோவலனின் காதலி
குட் டே பிலிம்ஸ் தயாரிப்பில் கே.அர்ஜுனராஜா இயக்கத்தில் பாரதிகே இசையமைத்துள்ள படம். திலீப்குமார், கிரண்மை, நவ்நீத் கபூர், கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.



