ஒரு ஊர்ல ரெண்டு ராஜா… – இன்று ஆரம்பம்

oru oorla rendu raja

“நாடோடிகள், சிந்துசமவெளி, ஆடு புலி, பட்டத்துயானை” போன்ற பல படங்களை தயாரித்த குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்  எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் புதிய படம் ‘ஒருஊர்ல ரெண்டுராஜா’.

”ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை” போன்ற படங்களைத் தொடர்ந்து, கண்ணன் இயக்கும் ஐந்தாவது படம் இது.

இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார், இவரது ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க, சூரி, நாசர், தம்பிராமையா, சிங்கமுத்து, சாஷா, சுருதி ரெட்டி, அனுபமா சுப்பிரமணியம், ஜோஸ்னா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வரும் இரயிலில் நடக்கும் யதார்த்தமான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. முதல் பாதி வரை இரயிலிலும், இரண்டாம் பாதி கார் பயணம், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியலான பயணமாக இருக்கும்.

விமல், சூரி, பிரியாஆனந்த் மூவரின் நோக்கம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதை கமர்ஷியலாகக் கொடுக்க உள்ளோம் என்கிறார் இயக்குனர் கண்ணன்.

இமான் இசையமைப்பில் யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. ஜுலை மாதம் படம் வெளிவர உள்ளது.

Read Previous

ஆமாம்…ஆன்ட்ரியாவைக் காதலித்தேன்… – அனிருத்

Read Next

தமிழில் நடிப்பது மகிழ்ச்சி – சமந்தா

Most Popular