தமிழில் நடிப்பது மகிழ்ச்சி – சமந்தா

anjaan first look

இந்த ஆண்டில் ரசிகர்களால் அதிகமாக உச்சரிக்கப்படப் போகிற ஹீரோயினாக வரப் போகிறார் சமந்தா.

சூர்யாவுடன் ‘அஞ்சான்’, விஜய்யுடன் பெயரிடப்படாத படம் என அவரது அடுத்த இன்னிங்ஸுக்குத் தயாராகி விட்டார்.

சிம்பு, த்ரிஷா நடித்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து வந்த ‘மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம்” படங்கள் ஏமாற்றினாலும் ‘நான் ஈ’ படம் அவரைப் பற்றிப் பேச வைத்தது. ஆனாலும், தமிழில் நடிக்காமல் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து அங்கு முன்னணி நடிகை ஆனார்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு நடிக்க வந்ததைப் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது,

“தற்போது தமிழ் சினிமா செல்லும் பாதையை நான் ரசிக்கிறேன். சமீபத்தில் ‘கோலி சோடா’ படத்தைப் பார்த்தேன். அப்படத்தைப் பற்றி என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை.

இப்போது எனக்கு  வரும் நல்ல வாய்ப்புகள்  தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றன.  இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

‘அஞ்சான்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு துணிச்சலான, யதார்த்தமான கதாபாத்திரத்தை இயக்குனர் லிங்குசாமி எனக்காக உருவாக்கியிருக்கிறார்.

சூர்யாவுடன் நடிப்பும், பணிவும் என்னை வியக்க வைக்கிறது. நான் கேள்விப்பட்டதை விட அவர் மேலாக இருக்கிறார்,” என தெரிவித்துள்ளார்.

Read Previous

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா… – இன்று ஆரம்பம்

Read Next

F – 3 கார் பந்தயத்தில் ‘வா டீல்’ பட லோகோ வெளியீடு…