2வது ஹீரோயினாக நடித்தாலும் பரவாயில்லை – ஓபனாகப் பேசும் சஞ்சனா சிங்

sanjana singh press meet news

‘ரேணிகுண்டா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். தொடர்ந்து ‘கோ, ரகளபுரம்’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ,  ‘மீகாமன்’ ‘வெயிலோடு விளையாடு’ ‘விஞ்ஞானி’ ‘மறுபடியும் ஒரு காதல்’, ‘யாருக்குக் தெரியும்?’,’வெற்றிச் செல்வன்’, மயங்கினேன் தயங்கினேன்” ரெண்டாவது படம்’, ‘அமளி துமளி’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஞாயிறன்று அவருடைய பிறந்த நாளை பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களுடன் கொண்டாடினார்.

வட இந்திய நடிகையாயிற்றே, அவர் ஹிந்தி கலந்து ஆங்கிலத்தில் தானே பேசுவார் என்ற எண்ணத்துடன் சென்ற பத்திரிகையாளர்களுக்கு இனிய அதிர்ச்சியைக் கொடுத்தார் சஞ்சனா சிங்.

ஆமாம், மெதுவாகப் பேசினாலும் சரியான உச்சரிப்புடன் அழகான தமிழில் அவர் பேசியது பத்திரிகையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

வட இந்தியாவிலிருந்து வந்து தமிழில் பல படங்களில் ஹீரோயினகாப் பேசினாலும், ‘எனக்கு டமில் தெரியாது’ என பேசும் ஹீரோயின்களுகு மத்தியில் அவருடைய தமிழ் ஆர்வம் உண்மையாகவே வியக்க வைத்தது.

அப்போது அவர் பேசியதாவது,

“ரேணிகுண்டா’வில் நடித்த போதே டைரக்டரிடம் எனக்கான வசனத்தை முதல்நாள் கொடுத்து விடும்படி கேட்பேன். வாங்கி வந்து மறுநாளே தமிழில் பேசி நடித்துக்காட்டி விடுவேன். அவரே ஆச்சரியப்பட்டு பாராட்டுவார். இப்படி என் முதல் பட அனுபவம். அவர் நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்ததால்தான் எனக்கு உங்கள் முன் நிற்கும் இந்த இடம் கிடைத்துள்ளது.”

 தமிழ் மொழி பற்றி நிறைய கேள்விப் பட்டுஇருக்கிறேன். அதுமாதிரி ஆடியோ நிகழ்ச்சிகளுக்கு பேச வேண்டியதை முன்பே தயார் செய்து மனப்பாடம் செய்து பேசி வந்தேன். இப்போது சொந்தமாக திக்கித் திணறியாவது பேசி விடுவேன். இப்போது தமிழ்மீது எனக்கு ஆர்வம் வந்து விட்டது.

ஜெயம்ரவியுடன் நடிக்கும் ‘தனியொருவன்’ படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். ‘விஞ்ஞானி’ ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். மீரா ஜாஸ்மின் கதாநாயகி, நான் 2 வது கதாநாயகி. இந்தப் படத்துக்காக சமீபத்தில் பாங்காக் போய் வந்தேன். அண்டர்வாட்டர் காட்சியில் நடித்தேன். ஹெலி காப்டர் காட்சி எல்லாம் எடுத்தார்கள். பாடல் காட்சியும் எனக்கு உண்டு. விவேக் சாருடன் நடித்தது மறக்க முடியாது. அவர் நிறைய சொல்லிக் கொடுத்தார். ” என்றார்

குத்துப் பாடலில் ஆடுவது பற்றிக் கேட்ட போது.

“முன்பு ஆடினேன். இரண்டு மூன்று படங்களில்தான் ஆடியிருப்பேன் ஆனாலும் எனக்கு அது பிடிக்கவில்லை. கதாநாயகியாகவே ஆசை. குறைந்தபட்சம் 2 வது கதாநாயகி வேடமாவது வேண்டும். ” தெளிவுடன் கூறுகிறார்

என் பிறந்த நாளை மீடியா நண்பர்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி. என்னை உயர்த்திவிட்ட உங்கள் மத்தியில் உங்களோடு இணைந்து கொண்டாடுவதில் எனக்குப் பெருமை,” என்றும் அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக் கிழமை என்றும் பார்க்காமல் வந்த, பத்திரிகையாளர்களுக்கு நன்றி கூறியவர், தனக்கு தமிழும் கற்றுக் கொடுத்து திரையுலகில் தனக்கு குடும்ப நண்பராக இருந்து வழிகாட்டும் மேலாளர் ஜானுக்கும் நன்றி கூறினார்.

Read Previous

கதை ‘லீக்’ ஆகவில்லை – ஏ.ஆர். முருகதாஸ் மறுப்பு

Read Next

இளையராஜாவிடம்தான் முதலில் கதை சொல்வேன் – இயக்குனர் மகேந்திரன்

Most Popular