தமிழன் முதல்வராக வேண்டும் – ரஜினிகாந்த் கருத்து

Rajinikanth, Soundarya, AR Rahman, Vairamuthu‘கோச்சடையான்’ இசை வெளியீடு நேற்று கோலகலமாக நடைபெற்றது. ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் விழா என்றாலே சூடான செய்தி ஏதாவது கிடைக்காதா என்று ஏங்குவது பத்திரிகையாளர்கள் வழக்கம்.

ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவாரா மாட்டாரா என்பது 1996ம் ஆண்டு முதலே இருந்து வரும் ஒரு விவாதம். ஏறக்குறைய 18 ஆண்டுகளாக இது பற்றிய  பேச்சும், விவாதமும் இருந்து வருகிறது.

ரஜினிகாந்த் லேசாக அரசியல் பற்றி ஏதாவது பேசினாலும் அதை கண், காது , மூக்கு வைத்து எழுதுவது நமது பத்திரிகையாளர்களின் வழக்கம்.

நேற்று பலர் அப்படி எதிர்பார்த்து வந்தாலும், ரஜினிகாந்த் சென்டிமென்ட்டாகப் பேசி அனைவரையும் கவர்ந்து விட்டார். ஆனால், வைரமுத்து ரஜினிகாந்த் பற்றிப் பேசியதை கண்டிப்பாக வேறு கோணத்தில் ஆராய ஆரம்பித்துவிடுவார்கள் . இனி, அதுதான் கொஞ்ச நாளைக்கு செய்தியாக வலம் வரும் என எதிர்பார்க்கலாம்.

வைரமுத்து ‘கோச்சடையான்’ விழாவில் பேசிய போது குறிப்பிட்டதாவது,

“ரஜினிகாந்த் ஒரு அறிவாளி என்பதை பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். அவர் அரசியலுக்கு வரப் போகிறார் என்ற பேச்சு உச்சத்தில் இருந்த போது, அவரைப் பார்த்து கேள்வி ஒன்றைக் கேட்டேன்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஒரு தமிழன்தான் வரவேண்டும் என்கிறார்களே, உங்களது பதில் என்ன என்றேன் ?. இந்த கடுமையான கேள்விக்கு “ நல்ல கருத்துத்தானே” என அற்புதமாக பதிலளித்தார்.

தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஒரு முதலியாரோ, நாடாரோ, தேவரோ, பிள்ளையோ வரவேண்டும் என்று சொல்லாமல் , “ஒரு தமிழன்தான் வரவேண்டும் என்பது நல்ல கருத்துத்தானே, ” என்று சாமர்த்தியமாக பதில் சொன்னார்.

சரி, இதற்கு என்ன என்கிறீர்களா…இதன் மூலம் ரஜினி அரசியலுக்கு வர விரும்பவில்லை என்பதை அப்போதே சொல்லியிருக்கிறார்.

புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள்…வைரமுத்துவே பொடி வைத்துப் பேசிய பிறகு நாமும் அவர் வழியிலேயே எழுதுவதுதானே சரி….

Read Previous

‘கோச்சடையான்’ – கோலாகல இசை விழா…

Read Next

பாலா – விஜய் சேதுபதி இணையும் ‘வசந்த குமாரன்’

Most Popular