ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் தயாரிக்கும் படம் ‘யாமிருக்க பயமே’.
‘டிகே’ இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார்.
“யாம் இருக்க பயமேன்’ என்பது இதுவரை தைரியமூட்ட சொல்லப்பட்ட வாக்கியம் ஆகும். இந்த வாக்கியத்துக்கு எதிர் மறையான கருத்தைக் கொண்ட படம்தான் ‘யாமிருக்க பயமே’.
திகில் படங்களைப் பார்த்திருக்கிறோம், விலா நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவைப் படங்களைப் பார்த்திருக்கிறோம். இந்தப் படம் நகைச்சுவை கலந்த திகில் படமாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர்.
‘கழுகு’ கிருஷ்ணா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக ரூபா மஞ்சரி நடிக்க, ஓவியா மற்றும் ஆதவ் கண்ணதாசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ‘சூது கவ்வும்’ கருணா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
16 தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள்.
உயரமானப் மலை பகுதிகளை கொண்ட நைனிடால் நகரத்தில் மிகுந்த பொருட்செலவில் இப்படம் தயாராகியுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.