பத்திரிகையாளராக இருந்து இயக்குனராக மாறியுள்ள ராஜு முருகன் இயக்கியுள்ள ‘குக்கூ’ திரைப்படம் நேற்று வெளிவந்து, அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
திரையுலகம் என்பதே போட்டி பொறாமை, நிறைந்த ஒன்று. நாம் அனுபவப் பூர்வமாக உணர்ந்த வரையிலும் அப்படித்தான் இருந்து வந்தது.
ஆனால், சமீப காலமாக இன்றைய தலைமுறை இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் நல்ல புரிதல் இருந்து வருகிறது.
நல்ல படைப்புக்களை சிலர் பாராட்டத் தவறுவதேயில்லை. அதிலும் சக இயக்குனரைப் தாராள மனம் கொண்டு பாராட்டுபவர்களில் முந்தி நிற்பவர் இயக்குனர் வசந்த பாலன்.
‘அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்’ படங்களின் இயக்குனரான வசந்த பாலன் ‘குக்கூ’ படத்தை மனம் திறந்து பாராட்டியுள்ர்.
படம் வெளிவந்த நேற்றே அவரது கருத்தைப் பதிவு செய்துள்ளார்….
“அப்பாடா… நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழில் ஒரு நல்ல படம் ….குக்கூ.
வாழ்த்துக்கள் ராஜுமுருகன்.
எளிய மனிதர்களின் அன்பை நகைச்சுவையை கிண்டலை பாடலை அரசியலை காதலை பேசுகிற படம்.
அழுகாச்சி படமாக ஆகிவிடுமோ என்று பட வெளியீட்டுக்கு முன்பு பதறியபடியே இருந்தேன். மிக இயல்பாக நெகிழ்வாக படத்தை சறுக்கல் இன்றி கொண்டு சென்று இருக்கிறார்.