நடிப்பில் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்தி வைத்துள்ளவர் நாசர். அவர் நடிக்கும் எந்தக கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் சிறப்பாக நடிப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்வார் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ‘சைவம்’.
விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சைவம்’ படப்பிடிப்பின் போது , அவர் ஏற்று நடித்துள்ள ஒரு முதியவர் கதாபாத்திரத்துக்கு என்று பிரத்தியேகமாக சிகை அலங்காரத்தில் ஒரு மாற்றம் செய்ய வேண்டி இருந்தது. அதாவது, அவரது முன்னந்தலையில் ஒரு பகுதியை சவரம் செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலை . இதனால் அவர் தற்போது நடித்து வரும் மற்ற படங்கள் பாதிக்கப்படுமோ என்று இயக்குனர் விஜய் தயங்கினார்.
இயக்குனர் விஜய், ஒப்பனைக் கலைஞரும், சிகை அலங்கார நிபுணருமான பட்டணம் ரஷீத்தை கலந்தாலோசித்தார். அவரது ஆலோசனையின் பேரில் நாசரின் அசல் சிகை அலங்காரம் போலவே ஒரு ‘விக்’ தயார் செய்தனர். அதன் உபயத்தில் நாசர் மற்ற படங்களிலும் இடையூறு இல்லாமல் நடித்தார் .
படத்தின் ‘ரஷ்’ காட்சிகளைப் பார்த்தத இயக்குனர் பெருமிதத்தோடு ‘ நாசர் சார் நமக்குக் கிடைத்த மிகவும் உன்னதமான நடிகர். ‘சைவம்’ படத்தில் வரும் அந்த முதியவர் கதாபாத்திரத்தில், நம் குடும்பத்தில் நாம் காணும் தாத்தாக்களை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளார். பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று, மெருகூட்டிய நாசருக்கு ‘சைவம்’ மற்றுமொரு மணி மகுடமாகத் திகழும்,” எனக் கூறுகிறார் விஜய்.
சீக்கிரமா தேசிய விருது கொடுங்கப்பா….
