‘திருமணம் எனும் நிக்காஹ்’ – அடுத்த மாதம் வெளியீடு…

thirumanam enum nikkah 0104மிக வித்தியாசமான கதை,  கதைக் களம் என்ற வகையில் எல்லோராலும்  பெரிதும் எதிர்பார்க்கபட்டுள்ள  ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படம் அடுத்த மாதம் வெளி வரும் என தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.

‘புரிதல் அவசியம்’ என்ற உன்னதக் கருத்தை வலியுறுத்தும் இந்த படம் காதலுக்கும் ஊடலுக்கும் இடையே புரிதலின் முக்கியமான பங்களிப்பைப் பற்றிக் கூறும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் அனீஸ்.

“இந்த படம் நமது நாட்டின் பிரதானமான இரு மதங்களின் சம்பிரதாயங்களையும் , கலாச்சாரத்தையும்  பின்னணி ஆக  வைத்து எடுக்கப்பட்ட படமாகும். நஸ்ரியாவின் நடிப்பும் சரி,  தோற்றமும் சரி , அவருக்கு என் இப்படி ஒரு புகழ் கிடைத்தது என்பதற்கு விடை கொடுக்கும் .

ஜெய், எங்கேயும் எப்போதும்,  எல்லோரையும் கவரும் வண்ணம் நடித்துள்ளார் . இசை அமைப்பாளர் ஜிப்ரானின் இசை படத்தின் வெற்றிக்கு பெரிதளவு உதவும். தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன் சாருக்கு என் மீது நம்பிக்கை வைத்து படம் தந்தமைக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

‘திருமணம் எனும் நிக்காஹ்’, மெல்லிய காதலுடன், இனிமையான இசையுடன், குடும்பத்தோடு பார்த்து மகிழும் நல்லதொரு படமாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர் அனீஸ்.

Read Previous

‘இனம்’ பிரச்சனை – சீமான் அறிக்கை…

Read Next

யார் இசையிலும் பாடத் தயார் – தேவா

Most Popular