யார் இசையிலும் பாடத் தயார் – தேவா

music director devaதமிழ் சினிமாவில் சென்னைக்கே உரிய ’கானா’ பாடல்களை பிரபலப்படுத்தியவர் இசையமைப்பாளர் தேவா.

ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாமலை, பாட்ஷா’ , மற்றும் விஜய், அஜித் நடித்த பல படங்களுக்கும் இசையமைத்து 90களில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கியவர்.

90களில் அவரது இசையில் வெளிவந்த பல படங்களில் இடம் பெற்ற கானா பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. அதிலும், சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் வெளி வந்த அனைத்து படங்களில் தேவாவின் கானா பாடல்கள் மிகவும் வரவேற்பைப் பெற்றன.

உதாரணமாக ‘காதல் கோட்டை’ படத்தில் ‘கவலைப்படாதே சகோதரா…’, ‘நினைவிருக்கும் வரை’ படத்தில் ‘ஷாக்கடிக்குது….’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தில் ‘சலோமியா…’, ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் ‘அண்ணா நகர் ஆண்டாளு…’, ‘பிரியமுடன்’ படத்தில் ‘ஒயிட்டு லகான்…’ போன்ற பல பாடல்களைச் சொல்லலாம்.

தற்போது, ஒரு பாடகராக ‘மான் கராத்தே’ படத்தில் அனிருத் இசையில் ‘ஓபன் த டாஸ்மாக்’ என்ற பாடலைப் பாடினார். அந்த பாடலும் இப்போது சூப்பர் ஹிட்டாகி விட்டது.

இதைத் தொடர்ந்து, பல படங்களில்  பாடுவதற்கு தேவாவுக்கு அழைப்பு வருகிறதாம்.

அவரும், எந்த இசையமைப்பாளர் அழைத்தாலும் பாடுவதற்கு ரெடியாக உள்ளேன் என்கிறார்.

ஆஹா…தேவாவுக்கு ‘புது ரூட்டு’ ஓபன் பண்ணிட்டாங்கப்பா…அடிச்சி தூள் கிளப்புங்க…

Read Previous

‘திருமணம் எனும் நிக்காஹ்’ – அடுத்த மாதம் வெளியீடு…

Read Next

எந்த நேரத்துல என்ன ஆகும்னு…நிம்மதியே இல்லை – வடிவேலு பேச்சு

Most Popular