“சென்னையில் ஒரு நாள், புலிவால்” போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம், தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கும் படத்தையும், விக்ரம் பிரபு நடிக்கும் படத்தையும் தயாரிக்க உள்ளது.
இந்நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் ‘சண்டமாருதம்’ என்ற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். இவரின் இயக்கத்தில் வரும் 20வது படம் இது. சரத்குமார் நடித்த “ஏய், மகாபிரபு, சாணக்யா,” போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் .
‘எதிரியை எதிரியா பார்த்து பழக்கமில்லை எனக்கு, எரிச்சித்தான் பழக்கம்’ என்கிற கொள்கையுடைய அழுத்தமான வில்லன் கதாபாத்திரம் ஏற்கிறார் சரத்குமார்.
“புயல், சுனாமி போன்றவற்றையும் தாண்டி அசுர வேகத்துடன் வீசும் காற்றுக்கு ‘சண்ட மாருதம்’ என்றுபெயர். எவ்வளவு பெரிய தடைகளையும் உடைக்கும் ஆற்றல் அப்பெரும் காற்றுக்கு உண்டு. இந்தக் கதைக்கு இப்பெயர் பொருத்தமாக இருப்பதால் ‘சண்ட மாருதம்’ என்று பெயர் சூட்டி இருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் A.வெங்கடேஷ்.
முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரக்கனி நடிக்கிறார். மற்றும் விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, டெல்லிகணேஷ், காதல் தண்டபாணி , ஆதவன், பாபூஸ், அவினாஷ், மாளவிகா, கானா உலகநாதன் நடிக்கிறார்கள். இவர்களுடன் கன்னடத் திரையுலகின் பிரபல நடிகர் அருண்சாகர் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.
இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்.
ஒளிப்பதிவு N.S.உதய்குமார். இவர் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் உதவியாளர்.
இசை – ஜேம்ஸ் வசந்தன்
பாடல்கள் – நா.முத்துக்குமார்
எடிட்டிங்: V.T. விஜயன்
கலை : மணிமொழியன் ராமதுரை
ஸ்டண்ட் : ஸ்டண் சிவா
நடனம் : கல்யாண், சிவசங்கர்
தலைமை செயல் அதிகாரி : பா.சக்திவேல்
தயாரிப்பு ஒருங்கினைப்பு : A.N. சுந்தரேசன்
தயாரிப்பு மேற்பார்வை : சபரிஷ் வினோத்
தயாரிப்பு: R.சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன்
கூடுதல் திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் A.வெங்கடேஷ்.
மே 14ந் தேதி படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெற்று ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது ‘சண்டமாருதம்’.