தமிழ்த் திரையுலகில் இருந்து காணாமல் போன அஞ்சலி, கன்னடப் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து “அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும்” போன்ற சிறந்த படங்களில் நடித்து, திறமையான நடிகைகளில் ஒருவராக தமிழ்த் திரையுலகில் வலம் வந்தார்.
கடந்த ஆண்டு அவரது சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சென்னையிலிருந்து, ஹைதராபாத் சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.
அதன் பின் எந்த தமிழ்ப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. அஞ்சலி எங்கிருக்கிறார் என்ற தகவலும் இங்கு யாருக்கும் தெரியவில்லை. ஆனால், தெலுங்குப் பட விழாக்களில் மட்டும் கலந்து கொள்வார்.
இதனிடையே, அஞ்சலி தற்போது கன்னடப் படடங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
‘கீதாஞ்சலி’ என்ற படத்திலும், அடுத்து ‘தீர ராணா விக்ரமா’ என்ற படத்தில் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். ஏற்கெனவே, சில வருடங்களுக்கு முன் ஒரு கன்னடப் படத்தில் நடித்த அஞ்சலி இந்த படங்கள் மூலம் மீண்டும் ‘ரீ-என்ட்ரி’ ஆகிறார்.
சென்னையில் ஆரம்பமான அஞ்சலியின் பயணம், ஹைதராபாத் சென்று தற்போது பெங்களூருவில் மையம் கொண்டுள்ளது….