எந்த ஹீரோயினும் என்னை பாராட்டியதில்லை – ஒரு பாடலாசிரியரின் வருத்தம்…

Angali Pangali - Audio Launch_00011ஸ்ரீ சுப்ர யோக ஜீவா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பாலமுருகன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் விஷ்ணுப்ரியன், சானியா தாரா, சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘அங்காளி பங்காளி’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் அண்ணாமலை, அவரது பாடல்களை இதுவரை எந்த ஹீரோயினும் பேசியதில்லை என்ற வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

“பாடலுக்கு இசை என்றிருந்தால்தான் ஒரு பாடலாசிரியரின் முழுமையான கவிதை வரிகள் ரசிகர்களிடம் சேரும். ஆனால் நான் இதுவரை வேலை செய்த எல்லா இசையமைப்பாளர்களை விட ஸ்ரீகாந்த் தேவாவிடம் வேலை செய்தது சந்தோசம்.

அதற்கு காரணம் 25 பாடல்களுக்கு மேல் நான் எழுதியிருந்தாலும் முதல் முதலாக என் பாடல் வரிகளுக்கேற்ப ட்யூன் போட்ட முதல் இசையமைப்பாளர் அவர்தான். நான் விஜய் ஆண்டனியிடம் வேலை செய்யும் போது மிகவும் சீரியசாக இருப்பார். ஆனால் ஸ்ரீகாந்த் தேவாவோ மிகவும் ஜாலியாக வேலை செய்வது எங்களுக்கெல்லாம் உற்சாகமாக இருக்கும்.

நான் அனுஷ்கா, ஹன்சிகா போன்ற ஹீரோயின்களுக்கு பாடல் எழுதியிருக்கிறேன். ஆனால், அவர்களெல்லாம் என் பாடலைப் பற்றி இதுவரை எதுவும் சொன்னதில்லை. ஆனால் இப்படத்தின் ஹீரோயின் என் பாடல்களின் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டினார்,” என மகிழ்ச்சியுடன் பேசினார்.

அனுஷ்கா, ஹன்சிகா பாராட்டினால் இன்னும் மகிழ்ச்சியடைவாரோ…

 

Read Previous

‘8 எம்.எம்’ – ஒரு பயணக் கதை…

Read Next

ஜுலையில் ‘டான் ஆப் தி பிளேனட் ஆப் தி ஏப்ஸ்’…

Most Popular