உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவிக்கும் ‘ Ape ‘ படங்களுக்கு தமிழகத்தில் என்றுமே ஒரு மவுசு உண்டு. ‘Apes’ என்னும் மனித குரங்கைக் குறிக்கும் இந்த வகை படங்கள் குழநதைகள் முதல் பெரியவர் வரை கதை வளத்தால் மட்டுமல்ல , தொழில் நுட்பத்திலும் கவர்ந்து வரும் தொடர் படங்களாகும்.
பிரபஞ்சம் உருவான நாளில் இருந்த மனித குரங்கை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் படம் வெளியான பத்து வருடங்களுக்கு பிறகு தொடர்ச்சியாக வரும் எட்டாவது படமாகும் ‘Dawn of the planet of the apes’.
இதக்கு முந்தைய படமான 2011இல் வெளியான ‘Rise of the planet of the apes’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஜூலை மாதம் உலகெங்கும் வெளிவர இருக்கும் ‘ Dawn of the planet of the apes’ இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நூற்றுகணக்கான வரைகலை தொழில் நுட்பக் கலைஞர்கள் இரவு பகல் பாராமல் உழைத்ததன் பலனே இந்த எதிர்பார்ப்பு என்கிறார் இயக்குனர் மேட் ரீவ்ஸ்.