நகரி தொகுதியில் நடிகை ரோஜா வெற்றி…

actress rojaஆந்திர மாநிலம் தெலுங்கானா, சீமாந்திரா என இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு மாநிலங்களுக்கும் பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது.

சீமாந்திரா மாநிலத்திற்கு உட்பட்ட சென்னைக்கு அருகே உள்ள நகரி தொகுதியில் நடிகை ரோஜா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அவர் பெற்ற மொத்த வாக்குகள் – 52,397 . அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த கலி முட்டு கிருஷ்ணம்மா நாயுடு பெற்ற மொத்த வாக்குகள் – 50,806.

கடந்த தேர்தல்களில் ரோஜா போட்டியிட்டிருந்தாலும் தோல்வியையே தழுவியிருந்தார்.

இந்த தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். நகரி தொகுதியில் 40 சதவீதத்திற்கும் மேல் தமிழர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் நுழைந்து பல வருடங்களாகி இருந்தாலும், இந்த வெற்றியின் மூலம், முதன் முதலாக உருவாக உள்ள சீமாந்திரா மாநில சட்டசபைக்குள் அடியெடுத்து வைக்கும் பெருமை ரோஜாவுக்குக் கிடைத்துள்ளது.

வெற்றி பெற்ற பின் செய்தியாளர்களிடம் கண்ணீருடன் நன்றி கூறினார்.

 

Read Previous

மோடி, ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து…

Read Next

பாலா தயாரிப்பில் சற்குணம், அதர்வா…

Most Popular