நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கும், தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றியை உருவாக்கியுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ரஜினிகாந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் மூலம் மோடிக்கு அவர் தெரிவித்த வாழ்த்து….
“அன்புள்ள நரேந்திர மோடிஜிக்கு வரலாற்று சாதனை படைத்ததற்காக மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிவித்துள்ள வாழ்த்தில்,
“தமிழக முதல்வர் ஜெயலிதாஜிக்கு, மகத்தான வெற்றி பெற்றதற்காக என்னுடைய வாழ்த்துகள்,” என தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் ரஜினிகாந்தை வீடு தேடிச் சென்று நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.