ட்விட்டர் – மணிரத்னமும் வந்து விட்டார்…

director maniratnamஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் ஒருவர் பின் ஒருவராக வரத் தொடங்கியுள்ளனர்.

‘கோச்சடையான்’ பட வெளியீட்டிற்கு முன் ரஜினிகாந்த் கூட ட்விட்டர் கணக்கை ஆரம்பித்தார். ஆனால், அவர் ஆக்டிவ்வாக இல்லை என்பது வேறு விஷயம். ரஜினிகாந்தைத் தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா போன்ற நட்சத்திரங்கள் ட்விட்டர் பக்கம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் யாருமே வரவில்லை.

ஆனால், எதிர்பாராவிதமாக சில மணி நேரங்களுக்கு முன் இயக்குனர் மணிரத்னம் ட்விட்டர் கணக்கை ஆரம்பித்து புதிதாக சேர்ந்துள்ளார்.

தனது மனைவி சுஹாசினிதான் ட்விட்டர் பக்கம் தன்னை அழைத்து வந்தார் என அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய ட்விட்டர் முகவரி  – https://twitter.com/IManiRatnam

Read Previous

மறுத்த நயன்தாரா…சம்மதிக்க வைத்த இயக்குனர்…

Read Next

அமலா பால் – இயக்குனர் விஜய் திருமணம்

Most Popular