விஜய் அண்ணா இடத்தைப் பிடிக்கணும்…ஜெய் ஆசை…

Vadacurry_00004விஜய் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ‘பகவதி’ படத்தில் அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமானவர் ஜெய்.

அதன் பின் சென்னை 28 படத்தில் 28 பேரில் ஒருவராக நடித்தார். சசிகுமார் இயக்கி நாயகனாக நடித்த ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் இரு நாயகர்களில் ஒருவராக ஜெய் நடித்த பிறகுதான் அவரைப் பற்றி அனைத்து ரசிகர்களுக்கும் தெரிய வந்தது.

அதன் பின் “எங்கேயும் எப்போதும், ராஜாராணி’’ படங்கள் மட்டுமே ஜெய்க்கு வெற்றிப் படங்களகா அமைந்தது. அவரும் எவ்வளவோ முயற்சித்தும் இன்னும் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்காமலே இருக்கிறார். இது ஜெய்க்கு வருத்தமாகவே உள்ளதாம்.

“அஜித், விஜய், சூர்யா, விக்ரம் மாதிரி சிம்பு, தனுஷ், ஜீவா, ஆர்யா அப்படின்னு ஒரு செட் உருவாகிடுச்சி. நானும் டாப் ஹீரோக்கள்ல ஒருத்தரா வரணும்னு முயற்சி பண்றேன். இப்ப நான் எந்த லிஸ்ட்ல இருக்கன்னு எனக்கே தெரியலை. ஆனா, நானும் முக்கியமான ஹீரோக்கள் லிஸ்ட்ல இருக்கேன்னு தெரியும். வெளிப்படையா சொல்ணும்னா, சினிமாவுல விஜய் அண்ணா இடத்தைப் பிடிக்கணும்,” என்கிறார் ஜெய்.

ஜெய்க்கு விஜய் இடத்தைப் பிடிக்க ஆசை, ஆனால், விஜய்க்கு ரஜினிகாந்த் இடத்தைப் பிடிக்க ஆசை…

 

Read Previous

விஜயகாந்த் மகன் பட இயக்குனர் ஓட்டம்…

Read Next

மீண்டும் சூர்யா – ஜோதிகா ஜோடி !!

Most Popular