விஜயகாந்த் மகன் பட இயக்குனர் ஓட்டம்…

sagaptham movie launchவிஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் ‘சகாப்தம்’ படத்தின் இயக்குனர் சந்தோஷ் குமார் ராஜன் அந்த படத்தை இயக்குவதை விட்டு விட்டு ஓட்டம் பிடித்து விட்டாராம்.

படத்தில் விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரின் தலையீடு அதிகமாக இருந்ததே அதற்குக் காரணம் என்கிறார்கள். பல நேரங்களில் இயக்குனரை ஓரம்கட்டி விட்டு விஜயகாந்த்தான் படத்தையே இயக்கினாராம். ஏற்கெனவே ‘விருதகிரி’ என்ற படத்தை இயக்கிய அனுபவம் விஜயகாந்துக்கு உண்டு.

இயக்குனர் சந்தோஷ் குமார் முடிந்தவரை போராடிப் பார்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே இதற்கு மேலும் இருந்தால் சரிப்பட்டு வராது என முடிவெடுத்து படத்தினை இயக்குவதை விட்டு விட்டு கிளம்பிவிட்டிருக்கிறார்.

தற்போது சுரேந்தர் என்பவர் படத்தை இயக்கி வருகிறாராம். அவரும் பெயருக்குத்தான் இயக்குனரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

Read Previous

காதல் செய்தியை மறுக்கிறார் ப்ரியாமணி…

Read Next

விஜய் அண்ணா இடத்தைப் பிடிக்கணும்…ஜெய் ஆசை…