பிரேசில் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டுப் போட்டி அரை இறுதியை நெருங்கி விட்டது.
நட்சத்திரங்கள் பலரும் கிரிக்கெட் விளையாட்டைப் போலவே கால்பந்து விளையாட்டையும் ரசித்து வருகிறார்கள். 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின் போது இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக நடந்து வருவேன் என்று பரபரப்பைக் கிளப்பியவர் நடிகை பூனம் பான்டே.
தற்போது அவர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் நாட்டிற்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இரு தினங்களுக்கு முன் பிரேசிலுக்கும், கோஸ்டாரிகா நாட்டிற்கும் இடையே நடைபெற்ற காலிறுதிப் போட்டிக்கு முன் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார் பூனம் பான்டே.
அதாவது, அந்த காலிறுதிப் போட்டியில் பிரேசில் வெற்றி பெற்றால் அவர் அணியும் ‘பிரா’வை ரசிகர் ஒருவருக்கு அன்பளிப்பாக வழங்குவேன் என்றார். (I am all Set To give My Lovely #BRA
To One Lucky Winner! who RETWEETS My Last Tweet if #BRA
Wins Tonight #WorldCup😉 ) அது மட்டுமில்லாமல் இது சம்பந்தமாக அவர் போட்ட ட்வீட்டை, ரி-ட்வீட் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் தனியாக ஒரு ‘ஹேஷ்டேக்’கை (#WhyIWantBRAofPoonamPandey) உருவாக்கி அதில் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதற்கு பூனம் பான்டேவும் பதிலளித்து வருகிறார்.
அவர் சொன்னது போலவே பிரேசில் அணி காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால், அவருடைய ‘பிரா’வை யாருக்கு வழங்கப் போகிறார் என்பதை பூனம் இன்னும் அறிவிக்கவில்லை.
பூனம் பாண்டேவின் ‘பிரா’வைப் பெற்று ‘பிராபலம்’…சாரி…‘பிரபலம்’ அடையப் போவது யாரோ ?