ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோருடைய கூட்டணியில் அனிருத் முதன் முறையாக இணைந்துள்ள ‘கத்தி’ படத்தின் இசை வெளியீடு வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது.
அனிருத் இசையில் விஜய்யும் ‘செல்ஃபி புள்ள…’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார். அதனால் ‘செல்ஃபி’ புகைப்படங்களை படக்குழு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.
விஜய் ஜோடியாக சமந்தா நடிக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமான விழாவாக நடத்துவார்களா, அல்லது நேரடியாக கடைகளுக்கு வினியோகம் செய்வார்களா என்பது இன்னும் சஸ்பென்சாகவே உள்ளது.
‘கத்தி’ படத்தை எதிர்த்து எற்கெனவே தமிழ் அமைப்புகள் குரல் எபப்பி வருகின்றன நிலையில் விழாவை நடத்துவது சரியாக இருக்குமா என படக்குழுவினர் ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது. படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வரும் 15ம் தேதி வரை ஹைதராபத்தில் நடக்கிறது. அதை முடித்துக் கொண்டு படக்குழுவினர் வந்தவுடன் பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சரத்குமார் உள்ளிட்ட சில திரையுலகப் பிரமுகர்கள் ‘கத்தி’ படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க முயன்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்னும் சில நாட்களில் இசை விழா பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.